சுவிட்சர்லாந்தில் ஓட்டப்பந்தயத்தில் அசத்திய 60வயது தமிழன்
சுவிட்சர்லாந்தில் Grand Prix Von Bern ஊடாக கடந்த சனிக்கிழமையன்று ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் 3 வயதில் இருந்து 92 வயது வரை உள்ளவர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும் இதில் 92 வயதுடைய ஒரு முதியவரும் கலந்துக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார்.
இலங்கையில் கிளிநொச்சி-பூநகரி பகுதியை பூர்வீகமாக கொண்ட 60 வயதுக்கொண்ட முருகவேல் பொன்னம்பலம் என்பவர் கலந்துக்கொண்டு பதக்கமும் வென்றுள்ளார்.
பதக்கத்தை வென்ற இலங்கை தமிழர்,
249 பேர் பங்குபற்றிய இந்த ஓட்டப்போட்டியில் முருகவேல் பொன்னம்பலம், 124 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இவர் தனது இலக்கை 4.7 கிலோ மீட்டர் தூரத்திலும் 30 நிமிடங்கள் 15 செக்கனில் ஓடி முடித்துள்ளார்.
இந்த வயதில் ஓட்டப்போட்டியில் உற்சாகமாக கலந்துக்கொண்டு பதக்கம் பெற்ற முருகவேல் பொன்னம்பலத்தை பலரும் பாராட்டியுள்ளதுடன் அவர் போட்டியில் பங்குபற்றிய காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.