பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள்

Flight
By Arbin Nov 30, 2025 06:19 PM GMT
Report

ஆயிரக்கணக்கான ஏர்பஸ் விமானங்களுக்கு அவசர மென்பொருள் புதுப்பித்தல் தேவைப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக

சில A320 விமானங்களில் அவசர மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படுவதால் பயணிகள் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் | 6000 Planes Found Unsafe To Fly

இந்த புதுப்பித்தல் முந்தைய மென்பொருள் பதிப்பிற்கு மாற்றப்பட வேண்டும் என்றும், சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும் என்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல நிறுவனங்கள் இரவோடு இரவாக மென்பொருள் வேலையை முடித்துக்கொள்ள முயற்சிகள் செய்திருந்தாலும், சில நிறுவனங்கள் வேலை தொடர்வதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளன.

கருங்கடலில் உக்ரைன் கைவரிசை... நெருப்பு கோளமான ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பல்கள்

கருங்கடலில் உக்ரைன் கைவரிசை... நெருப்பு கோளமான ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பல்கள்

இந்த நிலையில், ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த அறிவுறுத்தல் பிரித்தானிய விமான நிறுவனங்களில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் கூறியுள்ளார்.

இந்த வார இறுதியில் விமானத்தில் பயணிக்கவிருக்கும் பயணிகள், சமீபத்திய தகவல்களுக்கு தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் | 6000 Planes Found Unsafe To Fly

ஏர்பஸ் நிறுவனம் விமான நிறுவனங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரிய கதிர்வீச்சு மென்பொருளில் குறுக்கிட்டு முக்கியமான தரவுகளை சிதைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும்

இதில் A320 வரிசை விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய விமானம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று ஏர்பஸ், அதன் அமெரிக்க போட்டியாளர் போயிங் நிறுவனமாகும்.

A320 என்பது உலகின் மிகவும் பிரபலமான குறுகிய தூர விமானங்களில் ஒன்றாகும், தற்போது உலகம் முழுவதும் 6,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவையில் உள்ளன.

பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் | 6000 Planes Found Unsafe To Fly

பிரித்தானியாவைப் பொறுத்தமட்டில் ஈஸிஜெட் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களில் A320 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஈஸிஜெட் நிறுவனம் முழு நேர பராமரிப்பை முடுக்கி விட்டுள்ளதாகவும், அதன் பல விமானங்களில் ஏற்கனவே மென்பொருள் புதுப்பித்தல் முடித்துவிட்டதாகவும் கூறியது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவிக்கையில், தங்களின் மூன்று விமானங்களுக்கு மட்டுமே மென்பொருள் புதுப்பித்தல் தேவை இருந்ததாகவும், சேவைகளுக்கு எந்த இடையூறும் இன்றி தங்களின் பொறியாளர்கள் மென்பொருள் பணிகளை முடித்துவிட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US