பிரித்தானிய குடும்பத்துக்கு லொட்டரி கொண்டு வந்த அதிர்ஷ்டம்: சோகத்தில் ஒரே ஒருவர்
வேல்ஸ் நாட்டில் வாழும் இளம்பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரும் தொகை ஒன்று பரிசாகக் கிடைக்க, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால், ஒரே ஒருவர் மட்டும் அந்த அதிர்ஷ்டத்தை கைநழுவவிட்டுவிட்டார்...
ஏதோ நல்லது நடக்கப்போகிறது என உள்ளுணர்வு
வேல்ஸ் நாட்டிலுள்ள Monmouth என்ற இடத்தில் வாழ்ந்துவரும் Sonia (53), புற்றுநோயிலிருந்து விடுபட்டதும், ஏதோ நல்லது நடக்கப்போகிறது என உள்ளுணர்வு உணர்த்த, தனது மகளான Stephanie Daviesஐ லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கச் சொல்லியிருக்கிறார்.
அதேபோல Stephanie வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 61 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
Credit: Reuters
அந்த பரிசை குடும்பத்தில் அனைவருடனும் பகிர்ந்துகொண்டுள்ளார் Stephanie. தனது தாய், அவரது காதலர், தனது சகோதரிகள், தனது காதலர் என ஆளுக்கு 12 மில்லியன் பவுண்டுகளைக் கொடுத்துள்ளார் அவர்.
சோகத்தில் ஒரே ஒருவர்
இந்நிலையில், அந்த குடும்பத்துடன் தொடர்பிலிருந்த ஒரே ஒருவருக்கு மட்டும் ஏமாற்றம் கிடைத்துள்ளது. அதாவது, பள்ளிப்பருவத்திலிருந்தே Stephanieயின் சகோதரியான Courtney Daviesம், அதே ஊரைச் சேர்ந்த Daniel White என்பவரும் ஒருவர் மீது ஒருவர் ஆசை வைத்துள்ளனர்.
பின்னர் இரண்டு வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில், சில மாதங்கள் முன்பு Daniel தன் பள்ளிப்பருவக் காதலியான Courtneyயை பிரிந்திருக்கிறார்.
Credit: Wales News Service
ஒரு நாள் Danielக்கு தொடர்ந்து மொபைலில் அழைப்புகள் வந்துள்ளன. அவரது நண்பர்கள் பலர் அவரை அழைக்க, என்ன விடயம் என கேட்டிருக்கிறார் அவர். நீ Courtneyயை பிரிந்தது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா என்று கேட்டு நண்பர்கள் Danielஐத் திட்டியிருக்கிறார்கள்.
என்ன நடந்தது என அவர் கேட்க, அப்போதுதான் நண்பர்கள் விடயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, Courtneyயின் சகோதரியான Stephanieக்கு லொட்டரியில் 61 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. அதை அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொடுத்துள்ளார்.
Credit: Reuters
Daniel, Courtneyயைப் பிரியாமல் இருந்திருந்தால் அவரது தலைவிதியே மாறியிருக்கும். இப்போது காதலியைப் பிரிந்ததால் அந்த அதிர்ஷ்டத்தை அவர் இழந்துவிட்டார் என்று சொல்லி நண்பர்கள் ஆளாளுக்கு திட்ட, தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டார் Daniel.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |