இருமுறை புற்றுநோயை வென்ற 61 வயது பெண்: குற்றவாளியால் நேர்ந்த கொடூரம்
அமெரிக்காவில் 61 வயது பெண்ணொருவரை நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயில் இருந்து மீண்ட பெண்
அமெரிக்காவின் அரிஸோனாவைச் சேர்ந்த 61 வயதுப் பெண் சூசன் கெர்கே. இவர் டக்சனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவர் இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்ட பின், தனது ஓய்வுக்கால விழாவை திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், சூசன் கெர்கே கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடியிருப்பிற்கு வெளியே, ஒரு தொடர் குற்றவாளியின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகினார். இதில் அவரது செயற்கை பற்கள் கழன்று விழுந்தது படுகாயமடைந்தார்.
பரிதாப மரணம்
இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூளை இரத்தக் கசிவுக்காக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், செயற்கை சுவாசக் கருவியில் வைக்கப்பட்டிருந்த சூசன் பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதான Dahseir Edward Jefferson என்ற தொடர் குற்றவாளி இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.
தனது நண்பருக்கு உதவ சென்றபோது, ஜெபர்சனால் தாக்கப்பட்டு சூசன் உயிரிழந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |