கார் விபத்து, கூர்மையான ஆயுதக் காயங்கள்: வீட்டுவசதி வாரிய பெண் ஊழியர் உயிரிழப்பு: முதியவர் கைது
61 years old Man arrested for Bridgend Crash case: பிரித்தானியாவில் வீட்டுவசதி வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில் முதியவர் ஒருவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார் விபத்தில் பெண் ஊழியர் உயிரிழப்பு
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் பிரிட்ஜெண்ட்(Bridgend) பகுதியில் உள்ள கோயிட்டு சாலையில்(Coity Road) நடந்த கார் விபத்தில் 47 வயது எலினோர் பான்ஃபீல்ட்(Eleanor Barnfield) என்ற வீட்டுவசதி வாரிய பெண் ஊழியர் பலத்த காயமடைந்தார்.
அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் 'வாலிஸ் டூ கோஸ்ட்' (Valleys to Coast) பணியாற்றி வந்த வீட்டுவசதி வாரிய பெண் ஊழியர் எலினோர் பான்ஃபீல்ட் கார் விபத்தினால் ஏற்பட்ட காயத்தினால் மட்டும் உயிரிழக்கவில்லை.
அவரது உடலில் கார் விபத்தில் ஏற்படாத கூர்மையான ஆயுதக் காயங்கள்(Puncture wounds) இருப்பது கண்டறியப்பட்டது என தெற்கு வேல்ஸ் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
61 வயது முதியவர் கைது
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபராக பிரிட்ஜெண்ட் பகுதியை சேர்ந்த 61 வயது கிளிஃபோர்ட் ஃபாஸ்டர் (Clifford Foster) என்பவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அத்துடன் வெள்ளிக்கிழமை அவர் நியூபோர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால், இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் இணையத்திலோ அல்லது பொதுவெளியிலோ ஊகங்களை பரப்ப வேண்டாம் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.