6 மாதங்களாக டால்பினை காதலித்து வந்த விசித்திர மனிதர்! வெளிவந்த பகீர் தகவல்
அமெரிக்காவில் டால்பினுடன் 6 மாதங்களாக நெருக்கமாக இருந்ததாக ஒருவர் கூறிய தகவல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Florida பகுதியில் வசித்து வருபவர் Malcolm Brenner. 63 வயதான Malcolm Brenner பல அதிர்ச்சிகர தகவல்களை கூறியுள்ளார். அதாவது அவர் 6 மாதங்களாக டால்பினை காதலித்து வந்துள்ளார்.
டால்பினுடன் இருந்த காதல் அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இவர் Floridaவில் உள்ள பூங்காவிற்கு சென்ற போது அங்கிருந்த ஒரு டால்பின் இவரை மயக்கியதாக அவர் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் 1970ஆம் ஆண்டில் இவர் ஆறு மாதம் டால்பினுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறியதாவது, விலங்குகளை நேசிப்பது மனித இயல்பு. ஆரம்பத்தில் எனக்கு டால்பின் மீது அதிக ஈர்ப்பு இல்லை. ஆனால் பின்னர் நான் அதனை காதலிக்க ஆரம்பித்தேன்.
அதற்கு டோலி என்று பெயரிட்டேன். டால்பினுடன் தான் நடத்திய காதல் வாழ்க்கை பற்றி பேச நிறைய இருக்கிறது. அதோடு டால்பின் வேறொரு இடத்திற்கு சென்ற போது அதனின் பிரிவை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
டால்பின் டோலியின் மரணத்திற்குப் பிறகு ஐந்து வருடங்கள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.