அமெரிக்க விமான விபத்தில் 64 பேரும் இறந்திருக்கலாம்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்
அமெரிக்காவில் விமானம் ஒன்றும், ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றும்,ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான துயர சம்பவத்தில், விமானத்தில் பயணித்த 64 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் கிடைத்துள்ளது.
விபத்தில் 64 பேரும் இறந்திருக்கலாம்
புதன்கிழமை, அதாவது, நேற்று இரவு 9.00 மணியளவில், கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, விர்ஜினியாவிலுள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்துக்கு அருகே ராணுவ ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
விமானத்தில் 60 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும் இருந்ததாகவும், ராணுவ ஹெலிகொப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த 64 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான அந்த விமானம் Potomac நதியில் விழுந்த நிலையில், நதியிலிருந்து இதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்விகள்
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், அந்த விபத்து தொடர்பில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதாவது, அந்த ராணுவ ஹெலிகொப்டர் நீண்ட நேரமாக, அந்த விமானத்துக்கு நேராக பறந்துவந்துகொண்டே இருந்ததாம்.
இரவு நேரம், விமானத்தில் விளக்குகள் எரிவது பளிச்சென தெரிகிறது, அப்படியிருந்தும் அந்த ஹெலிகொப்டர் ஏன் விலகிச் செல்லவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
This accident happened just after Donald Trump placed a hiring freeze on air traffic controllers and gutted an air safety advisory committee.#TrumpPlaneAccident pic.twitter.com/vUPb0kGvLO
— Patricia: @ASU🇺🇦 A failed coup is still a coup. (@patyvillaescusa) January 30, 2025
அதேபோல, கண்ட்ரோல் டவரில் இருந்தவர்களும், ஹெலிகொப்டரை இயக்குபவரிடம் விமானம் உங்களுக்குத் தெரிகிறதா என்று கேட்காமல்,திரும்பியோ, விலகியோ செல்லுமாறு ஏன் அறிவுறுத்தவில்லை என்றும் கேட்டுள்ளார் ட்ரம்ப்.
இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது என்று கூறியுள்ள ட்ரம்ப், இது சரியில்லை என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |