23 வயது இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய 65 வயது தாத்தா: 6 மகள்களின் சம்மதத்துடன் நடந்த திருமணம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நக்கத் யாதவ் தன்னை விட 42 வயது குறைவான பெண்ணை 6 மகள்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து செய்து கொண்டுள்ளார்.
42 வயது வித்தியாசத்தில் திருமணம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாராபங்கி மாவட்டத்தில் ஹூசைனாபாத் பகுதியை சேர்ந்த நக்கத் யாதவ் என்ற 65 வயது தாத்தாவிற்கு 6 மகள்கள் உள்ளனர்.
இந்த 6 மகள்களுக்கும் உரிய முறையில் நக்கத் யாதவ் திருமணம் செய்து வைத்து தனது கடமை நிறைவேற்றியுள்ளார்.
இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நக்கத் யாதவ்-வின் மனைவி மரணமடைந்ததால், தனிமையில் வாடிய 65 வயது நக்கத் யாதவ் வேறு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தன்னை விட 42 வயது குறைவான நந்தினி என்ற 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள நக்கத் யாதவ் திட்டமிட்டுள்ளார்.
நக்கத் யாதவ்-வின் 6 மகள்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இரு வீட்டாரின் முன்னிலையில் அயோத்தி மாவட்டத்தில் உள்ள கமகாயா தேவி கோவிலில் நந்தினி என்ற 23 வயது பெண்ணுக்கு நக்கத் யாதவ்(65) தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார்.
வயது விஷயமில்லை
உறவினர்கள் முன்னிலையில் அனைத்து சடங்குகள் மற்றும் ஆடல் பாடல் கொண்டாட்டங்களுடன் நக்கத் யாதவ் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த திருமணம் குறித்து பேசிய நக்கத் யாதவ், மனைவியின் மறைவுக்கு பிறகு தனிமையில் வாடியாதால் மறுமணம் செய்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மணப்பெண் நந்தினியும் இந்த திருமணத்தில் தனக்கு மகிழ்ச்சி எனவும், வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.