பிரித்தானியா சிறையில் இடநெருக்கடி: அவசர திட்டமாக 650 கைதிகள் முன்கூட்டியே விடுதலை
650 inmates released across britain for jail offloading: பிரித்தானியாவில் சிறையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து கைதிகள் விடுதலை
பிரித்தானியாவில் சிறைகளில் கைதிகளின் அதிகமான எண்ணிக்கை ஏற்பட்டுள்ள தீவிரமான நெருக்கடியை குறைக்க அரசு அவசர திட்டம் ஒன்றை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2 ஆண்டுகள் 5 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் 2 மாதங்கள் வரையிலான தண்டனை காலம் மீதமுள்ள கைதிகளின் தண்டனை காலத்தை கழித்து கிட்டத்தட்ட 650 சிறைக் கைதிகள் இன்று காலை அவர்களது தண்டனை காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முந்தைய மாதம் நடந்த முதல் கட்ட நடவடிக்கையின் போது 18 மாதங்கள் முதல் 30 மாதங்கள் வரை தண்டனை காலம் மீதம் இருந்த 650 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
தண்டனை சட்டம் 2026-யின் கீழ்(Sentencing Act 2026) இந்த முன்கூட்டியே விடுதலை செய்யும் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் சிறைகளில் நிலவிவரும் கடுமையான இடநெருக்கடியை சமாளிக்க அடுத்த ஒரு ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 5000 கைதிகள் தங்களது தண்டனை காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பொது சமூகத்திற்கு திரும்ப உள்ளனர்.
ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ் 6000 கைதிகள் விடுதலை செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர்களின் தலையீட்டுக்கு பிறகு இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன், பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகள், கடுமையான குழந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்கள், நரபலி மற்றும் மனிதக் கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் இந்த விடுதலை திட்டம் மூலம் வெளியேறாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்படும் பிற குற்றவாளிகள் தங்களது தண்டனை காலத்தில் பாதிக்கு பதிலாக தற்போது மூன்றில் ஒருப் பங்கு மட்டும் நிறைவு செய்தாலே போதும். அதேபோல கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட நபர் மூன்றில் இரண்டு பங்கிற்கு பதிலாக பாதி(1/2) தண்டனை காலத்தை நிறைவு செய்து இருந்தாலே போதுமானது.

தொடரும் தீவிர கண்காணிப்பு
குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் தொடர்ந்து சட்டம் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட கண்காணிப்பிலேயே தங்களது மீதமுள்ள தண்டனை காலத்தை கழிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலை செய்யப்படும் அனைத்து கைதிகளுக்கும் செர்கோ()நிறுவனத்தின் GPS கண்காணிப்பு சாதனங்கள் பொறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களுக்கு நடமாடும் பகுதிகள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் தீவிரமாக விதிக்கப்படும் என்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.