குப்பைக்குச் செல்ல இருந்த 6,500 டன் உணவு: மீட்ட சுவிஸ் தொண்டு நிறுவனம்
உலக நாடுகள் பல விலைவாசி உயர்வால் அவதியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்தில் குப்பைக்குச் செல்ல இருந்த 6,500 டன் உணவை சுவிஸ் தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது.
குப்பைக்குச் செல்ல இருந்த 6,500 டன் உணவு
சுவிஸ் தொண்டு நிறுவனமான Schweizer Tafel (Swiss table), கடந்த ஆண்டில், குப்பைக்குச் செல்ல இருந்த 6,500 டன் நல்ல நிலையிலிருந்த உணவை வீணாவதிலிருந்து காப்பாற்றியதாக தெரிவித்துள்ளது.
உணவு வீணாகாமல் காப்பாற்றியது மட்டுமின்றி, அதனால் வெளியாக இருந்த 10,600 டன் கார்பன் டைஆக்சைடு வெளியேறுவதையும் தடுத்துள்ளதாக Swiss table தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உண்ணத் தகுந்த நிலையில் இருந்த அந்த உணவு, சில்லறை வர்த்தகம் மற்றும் தொழில்துறையிலிருந்து வந்துள்ளது.
Swiss table தொண்டு நிறுவனம், வீணாக இருந்த அந்த உணவை மீட்டு, இலவசமாக, சுமார் 500 சமூக சேவை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |