67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: சுவிட்சர்லாந்தில் நடக்க இருக்கும் ஏலம்
67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான டி-ரெக்ஸ் எலும்புக்கூடு அடுத்த மாதம் ஐரோப்பாவில் ஏல விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைரனோசொரஸ் எலும்புக்கூடு ஏலம்
சுவிட்சர்லாந்தில் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டி-ரெக்ஸ் எலும்புக்கூடு அடுத்த மாதம் ஏப்ரல் 18 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Zurich-ல் ஏலத்துக்கு வர இருப்பதாக கொல்லர் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரினிட்டி என்று அழைக்கப்படும் எலும்புக்கூடு, சுமார் 3.9 மீட்டர் (12.8 அடி) உயரம் கொண்டது. இது ஆறு முதல் எட்டு மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனை செய்ய ($6.5-8.7 மில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது.
T-rex skeleton
டிரினிட்டி என்பது "இருப்பதில் உள்ள மிகவும் கண்கவர் டி-ரெக்ஸ் எலும்புக்கூடுகளில் ஒன்றாகும், அத்துடன் நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவமாகும் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் முதல் முறை
இத்தகைய பிரம்மாண்ட டைரனோசொரஸ்-ரெக்ஸ் எலும்புக்கூடு விற்பனை ஐரோப்பாவில் முதல் முறையாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, உலகளவில் இது மூன்றாவது முறையாகும்.
Getty Images
இந்த டிரினிட்டி எலும்புக்கூடு மூன்று டி-ரெக்ஸ் மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட எலும்புப் பொருட்களால் ஆனது.
டிரினிட்டி எலும்புக்கூடு விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை மிகக் குறைந்த மதிப்பீடு என்று நம்புவதாக கொல்லரில் உள்ள இயற்கை வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு பொறுப்பான கிறிஸ்டியன் லிங்க் தெரிவித்துள்ளார்.
Christie’s