Jobs: தமிழக அரசு பேருந்தில் 685 பணியிடம் - உடனே விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேவையில் 685 பணியிடங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பங்களை தற்போது விண்ணப்பித்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை,கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. இங்கு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நடைமுறையில் இருந்து வருகின்றது. இதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறை இருப்பதால், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பணியிடங்களை நிரப்ப அரசு தீர்மானித்துள்ளது.
கல்வி தகுதி
-
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
-
ஹெவி லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும்.
-
குறைந்தபட்சம் 18 மாதம் அனுபவம் இருக்க வேண்டும்.
- முதலுதவி சான்றிதழ், பேட்ஜ் மற்றும் தகுதியான கண்டக்டர் லைசன்ஸ் இருக்க வேண்டும்.
வயது
-
01.01.2023 அன்றைய தேதிப்படி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- (BC/MBC/DNC/SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
-
IRT மூலமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாத பணி அனுபவம் என்ற நிபந்தனை இல்லை.
- குறைந்தபட்சம் 160 செ.மீட்டர் உயரம் 50 கிலோ எடைக்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.590ம், பிற பிரிவினர் ரூ.1,180 செலுத்த வேண்டும்.
நாளை அதாவது 18 ஆம் திகதி பிற்பகல் 1 மணிவரை www.arasubus.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் எழுத்துத்தேர்வு, பிராக்டிக்கல் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |