விண்வெளியிலும் உயிர் வாழும் 7 அதிசய உயிரினங்கள்: எது தெரியுமா?
பொதுவாக விண்வெளியில் ஆக்ஸிஜன், காற்று மற்றும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மனிதர்களுக்கு ஏற்ற இடம் இல்லை என்கின்றனர் .
மேலும், அங்குள்ள வெற்றிடம், அண்ட கதிர்வீச்சு மற்றும் கடுமையான குளிர் மற்றும் கடுமையான வெப்பம் ஆகியவை உயிருக்கு ஆபத்தானவை.
ஆனால், இந்த கடினமான சூழ்நிலைகளிலும் கூட வாழக்கூடிய 7 உயிரினங்கள் நம் பூமியில் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்.
டார்டிகிரேட்
2007ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் டார்டிகிரேட்டை விண்வெளிக்கு அனுப்பினர். அவை உயிருடன் திரும்பின.
அவை தங்களை ஒரு சிறப்பு கிரிப்டோபயோசிஸ் நிலைக்கு எடுத்து செல்வதால் அவை பல ஆண்டுகளாக சாப்பிடாமல் வாழ முடியும் என்று கூறப்படுகிறது.
கரப்பான் பூச்சி
2007ஆம் ஆண்டில், ரஷ்யாவின் ஃபோட்டான்-எம்3 விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக, கரப்பான் பூச்சி முட்டைகள் விண்வெளி கதிர்வீச்சில் வைக்கப்பட்டன.
இதன் விளைவாக முட்டைகள் பாதுகாப்பாக குஞ்சு பொரித்து கரப்பான் பூச்சிகள் உயிருடன் இருந்தன.
நெமடோட் புழு
இந்த சிறிய பூச்சிகள் நாசாவின் கொலம்பியா ஸ்பேஸ் ஷட்டில் மிஷனில் அனுப்பப்பட்டன.
ஆனால் இதில் ஒரு விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்த சிறிய புழுக்கள் அதனை தாண்டி உயிருடன் இருந்தன.
உப்பு இறால்
பொதுவாக உப்பு இறால் முழுமையாக காய்ந்த பிறகும் உயிர்வாழ முடியுமாம்.
அவற்றின் முட்டைகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு குஞ்சு பொரித்து உயிர் பிழைத்தன.
பழ ஈக்கள்
விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினங்கள் பழ ஈக்கள். அமெரிக்கா 1947ஆம் ஆண்டில் அவற்றை விண்வெளிக்கு அனுப்பியது.
நுண் ஈர்ப்பு மற்றும் கதிர்வீச்சின் விளைவைப் புரிந்துகொள்ள அவற்றை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றன.
பூஞ்சைகள்
கிரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸ் மற்றும் கிளாடோஸ்போரியம் ஸ்பேரோஸ்பெர்மம் போன்ற சில வகையான பூஞ்சைகள் விண்வெளியின் கதிர்வீச்சைத் தக்கவைத்துக் கொள்கின்றன.
விஞ்ஞானிகள் இப்போது அவற்றை இயற்கை கதிர்வீச்சு கவசங்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜீப்ராஃபிஷ்
மனிதர்களைப் போன்ற டிஎன்ஏவைக் கொண்டுள்ள ஜீப்ராஃபிஷ் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான உயிரினங்கள்.
அவற்றின் கருக்கள் விண்வெளியின் கடுமையான சூழ்நிலைகளில் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |