சுவிஸ் இளைஞரைக் கடத்திய கும்பல்: பொலிசார் அதிரடி
சுவிஸ் இளைஞர் ஒருவர் பிரான்சில் கடத்தப்பட்ட நிலையில், பிரான்ஸ் பொலிசார் அதிரடி நடவடிக்கைகள் மூலம் அவரை மீட்டுள்ளார்கள்.
சுவிஸ் இளைஞரைக் கடத்திய கும்பல்
கடந்த வாரம் பிரான்ஸ் சென்ற தனது 20 வயதுகளிலிருக்கும் சுவிஸ் நாட்டு இளைஞர் ஒருவர் ஒரு மர்ம கும்பலால் கடத்தப்பட்டார்.
பிரான்ஸ் பொலிசார் தொடர்ச்சியாக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று அந்த இளைஞர் மீட்கப்பட்டார்.
அவர், Valence ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
150 பொலிசார் இந்த அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், அந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அந்த கடத்தல் கிரிப்டோகரன்சி தொடர்பிலானது என கருதப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே இத்தகைய கடத்தல்கள் தொடர்கின்றன.
கிரிப்டோகரன்சி வைத்திருக்கும் பணக்காரர்களைக் குறிவைத்து, அவர்களுடைய உறவினர்களைக் கடத்திவைத்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களும், அப்படி மிரட்டுபவர்கள் பொலிசில் சிக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |