3 வருட FD-க்கு பம்பர் வட்டி விகிதங்களை வழங்கும் 7 வங்கிகள்
3 வருட நிலையான வைப்புத்தொகைகளுக்கு பம்பர் வட்டி விகிதங்களை வழங்கும் 7 வங்கிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
FD வட்டி விகிதங்கள்
நீங்கள் நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இது எப்போதும் உங்களுக்கு நன்மை பயக்கும்.
இதன் மூலம், அதிக வட்டி விகிதங்களை வழங்கும் வங்கியில் நீங்கள் முதலீடு செய்யலாம். இருப்பினும், பொதுவாக நீண்ட கால நிலையான வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன.
ஆனால் இப்போது நாம் 3 வருட FD-க்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் 7 பொது மற்றும் தனியார் துறை வங்கிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
HDFC வங்கி
தனியார் துறை வங்கியான HDFC வங்கியானது 3 வருட நிலையான வைப்புத்தொகையில் சாதாரண குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி விகிதங்களையும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீத வட்டி விகிதங்களையும் வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
ஐசிஐசிஐ வங்கியானது 3 வருட நிலையான வைப்புத்தொகையில் சாதாரண குடிமக்களுக்கு 7 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)
கோடக் மஹிந்திரா வங்கியானது 3 ஆண்டு கால வைப்புத்தொகையில் சாதாரண குடிமக்களுக்கு 7 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீத வட்டியையும் வழங்குகிறது.

மார்ச் 31 -க்குள் Post Office-ன் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் ரூ.1.5 லட்சம் வரை வரி சேமிக்கலாம்
ஃபெடரல் வங்கி (Federal Bank)
ஃபெடரல் வங்கியானது 3 வருட வைப்புத்தொகையில் பொது குடிமக்களுக்கு 7.1 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
பாரத ஸ்டேட் வங்கி State Bank of India (SBI)
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 3 வருட வைப்புத்தொகையில் பொது குடிமக்களுக்கு 6.75 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
பொதுத்துறைவங்கியான பாங்க் ஆஃப் பரோடா, பொது குடிமக்களுக்கு 7.15 சதவீத வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India)
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியானது பொது குடிமக்களுக்கு 6.7 சதவீத வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீத வட்டியையும் வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |