FD -க்கு அதிக வட்டியை வழங்கும் 7 வங்கிகள்.., முழுமையான விவரங்கள்
நிலையான வைப்புக்கு (FD) அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 7 வங்கிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் பணத்தை பாதுகாப்பான வழியில் முதலீடு செய்ய விரும்பினால், நிலையான வைப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். நாட்டில் உள்ள பல வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு பெரும் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அந்தவகையில், இந்தியாவின் 7 பெரிய வங்கிகள் என்ன வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பதை கீழே பார்க்கலாம்.
HDFC Bank
HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை உள்ள நிலையான வைப்புத்தொகைக்கு 7.40% வட்டியை வழங்குகிறது.
அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு இந்த வட்டி விகிதம் 7.90% வரை உள்ளது. இந்த கட்டணங்கள் ஜூலை 24, 2024 முதல் பொருந்தும்.
ICICI Bank
ஐசிஐசிஐ வங்கி 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு 7.25% வட்டியை பொதுக் குடிமக்களுக்கும், 7.80% வட்டியை மூத்த குடிமக்களுக்கும் வழங்குகிறது.
Kotak Mahindra Bank
கோடக் மஹிந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 390 முதல் 391 நாட்கள் நிலையான வைப்புத்தொகைகளுக்கு 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக அளிக்கப்படுகிறது. இந்த கட்டணங்கள் ஜூன் 14, 2024 முதல் அமலுக்கு வரும்.
Federal Bank
ஃபெடரல் வங்கி 777 நாட்கள் கொண்ட நிலையான வைப்புத்தொகைக்கு 7.4% வட்டியை பொதுக் குடிமக்களுக்கும், 7.9% வட்டியை மூத்த குடிமக்களுக்கும் செலுத்துகிறது. இந்த கட்டணங்கள் ஒக்டோபர் 16, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

State Bank of India
எஸ்பிஐ வங்கியானது 2 முதல் 3 ஆண்டுகள் வரை உள்ள நிலையான வைப்புத்தொகைக்கு 7% வட்டியை பொதுக் குடிமக்களுக்கும், 7.5% வட்டியை மூத்த குடிமக்களுக்கும் செலுத்துகிறது. இந்த கட்டணங்கள் ஜூன் 15, 2024 முதல் அமலுக்கு வரும்.
Bank of Baroda
பாங்க் ஆஃப் பரோடா வங்கியானது 400 நாட்கள் நிலையான வைப்புத் தொகைக்கு 7.3% வட்டியை பொதுக் குடிமக்களுக்கும், 7.8% வட்டியை மூத்த குடிமக்களுக்கும் வழங்குகிறது. இந்த கட்டணங்கள் ஒக்டோபர் 14, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
Union Bank of India
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பொது குடிமக்களுக்கு 456 நாட்கள் நிலையான வைப்புத்தொகைக்கு 7.3% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் கூடுதல் பலன் அளிக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        