காதலனின் திருமணத்தில் புகுந்த 7 முன்னாள் காதலிகள்! பேனருடன் போராடியதால் அதிர்ந்த மணமகன்
சீனாவில் காதலனின் திருமணத்தில் முன்னாள் காதலிகள் ஏழு பேர் பேனர் ஏந்தி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலிகளின் பேனர் போராட்டம்
சீனாவின் யுனான் மாகாணத்தை சேர்ந்த சென் என்ற இளைஞருக்கு கடந்த பிப்ரவரி 5ம் திகதி திருமண ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இருந்துள்ளது.
இதற்கிடையில் திருமண நாள் அன்று திருமண மண்டபத்திற்குள் திடீரென நுழைந்த 7 பெண்கள் கையில் பேனர் ஒன்றை ஏந்திக் கொண்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் குதித்தனர்.
பெண்கள் கையில் வைத்து இருந்த பேனரில் “பெண்களை ஏமாற்றாதீர்கள், உண்மையாக இருங்கள்” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.
அத்துடன் "பெண்களிடம் நேர்மையாக இருங்கள், வருங்காலத்தில் அவர்கள் உங்களை பழி வாங்க முடிவு செய்தால் என்ன செய்வீர்கள் உங்கள் நிலைமை என்னவாகும்" என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தான் மணமகன் சென் இந்த 7 பெண்களையும் காதலித்து ஏமாற்றி உள்ளார் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.
மன்னிப்பு கேட்ட மணமகன்
இதனை கண்டு திகைத்து போன மணமகன் சென், முன்னாள் காதலிகள் 7 பேரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் மிகவும் மோசமான காதலனாக இருந்ததை ஒப்புக் கொள்கிறேன் எனவும், இளமையில் முதிர்ச்சி இல்லாமல் தவறு செய்துவிட்டேன், அத்துடன் பல பெண்களை காயப்படுத்தி விட்டேன் என தெரிவித்துள்ளார்.
SCMP composite/handout
இறுதியில் காதலியை ஏமாற்றுவதை விட அவர்களிடம் உண்மையாக இருங்கள் என்று வசனம் பேசியுள்ளார், இருப்பினும் கடைசி வரை அந்த பெண்களை எதற்காக பிரிந்தேன் என்ற காரணத்தை மட்டும் அவர் வெளியே சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.