கண்பார்வை திறனை அதிகரிக்க இந்த 7 உணவுகள் போதும்
மன அழுத்தம், நீண்ட நேரம் போன் பார்ப்பது, தூக்கமின்மை, வயதாவது மற்றும் வேறு சில காரணங்களால் பார்வை திறனில் பிரச்சனை ஏற்படுகிறது.
ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் நமது கண் பார்வையும் பலவீனமாகிறது.
ஊட்ட்ச்சத்து மிகுந்த இந்த 7 உணவுகளை உண்பதன் மூலம் கண் ஆரோக்கியத்தையும் பலப்படுத்த முடிவதோடு கண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ள முடியும்.
சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது கண்களில் உள்ள இரத்த நாளங்களுக்கு சிறந்தது.
மேலும், இது கண்புரை உருவாகும் அபாயத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.
நட்ஸ்
பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிற உலர் பழங்கள் போன்ற நட்ஸ்களில் வைட்டமின் ஈ மற்றும் சி, துத்தநாகம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
கண்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கும் மூலமாக இது செயல்படுகிறது.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் அதிக இரும்புச்சத்து, கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்கள் உள்ளன.
கீரை, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவை நம் கண் பார்வையை பலப்படுத்துகின்றன.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் துத்தநாகம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக செயல்படுகிறது.
இயற்கையாகவே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பருப்பு வகைகள் பெரிதளவில் பயன்படுகிறது.
முட்டை
முட்டைகளில் லூடெய்ன் மற்றும் ஜீஜெனாதின் இருப்பதால், வயதான காலத்தில் ஏற்படும் கண் பிரச்சனைகளிலிருந்து இது காக்கிறது.
மேலும் முட்டைகளில் வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் ஜிங்க் அதிகளவில் இருப்பதால் கண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.
கிட்னி பீன்ஸ்
கிட்னி பீன்ஸில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
இரவு நேர பார்வைக்கு நல்லது மற்றும் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.
கிவி
கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பழங்களில் ஒன்று கிவி.
இது புற ஊதா கதிர்களுக்கு எதிராக கண்களை பாதுகாக்க உதவுகிறது மற்றும் கண்களுக்கு இனிமையான விளைவைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |