உங்கள் வீட்டில் இது இருந்தா போதும்.... நீங்க 100 வருடம் வாழ்வீர்கள்
அனைவருக்குமே சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாகவே இருக்கும்.
அதற்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் செய்தால் மட்டும் போதாது. அதற்கு ஒரு சில அடிப்படை விடயங்களையும் வீட்டில் செய்ய வேண்டும்.
முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் கட்டாயமாக இந்த 7 மூலிகை தாவரங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் கட்டிப்பா 100 வருடம் நீங்கள் உயிர் வாழ்வீர்கள்.
7 மூலிகை தாவரங்கள்
1. துளசி
துளசியில் 04 வகைகள் காணப்படுகின்றது. ராம் துளசி, காட்டு வன துளசி, கிருஷ்ண துளசி, கற்பூரத் துளசி என உள்ளன. இது கிருமிநாசினி, பூஞ்சைக் கொல்லி போன்றவற்றிக்கான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குணங்கள் இருகின்றது. இதை வீட்டில் வைத்தால் நல்லது.
2. புதினா
தசைகள், வீக்கம், வயிறு கோளாறு, காய்ச்சல், ஸ்பாஸ்டிக் பெருங்குடல், குடல் பிரச்னைகளுக்கு தீர்வாக இது இருக்கும். இது பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆகவே வீட்டில் இதையும் வளர்க்கலாம்.
3. எலுமிச்சை புல்
தேநீர் தவிர, நீங்கள் சாலட்டுகள், சூப்கள், பிற உணவுகளில் எலுமிச்சைப் புல் சேர்க்கலாம். இது இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். தொண்டைப் புண், தொற்று, வயிற்று வலி, தலைவலி, மூட்டு வலி, தசை வலி, செரிமான மண்டலத்தின் பிடிப்பு, தசைப் பிடிப்பு, சுவாச பிரச்னைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
4. கற்றாழை
மருத்துவம் நிறைந்த ஒரு செடியாக இருப்பது கற்றாழை தான். கற்றாழையை வளர்த்தால் நுளம்பு தொல்லை கிடையாது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் கற்றாழையை எடுத்துக்கொண்டால் நல்லது.
5. கறிவேப்பிலை
கறிவேப்பிலை மருத்துவத்திற்கு அதிகமாக காணப்படும். . இதை வீட்டில் எளிதாக வளர்க்கலாம். உடலுக்கும் சூழலுக்கும் நல்லது.
6. அஸ்வகந்தா
பாரம்பரியமாக ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்துவதாக அஸ்வகந்தா காணப்படுகின்றது. மன அழுத்தத்தைக் குறைக்கவும், நரம்புகளைப் பாதுகாக்கவும், கருவுறுதலை மேம்படுத்தவும், இதய நோய்களைத் தடுக்கவும் இது உதவுகின்றது எனலாம்.
7. பிராமி
இது முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. பிராமி மூளை மற்றும் உடலில் நரம்பு சம்பந்தமான நோய்களைத் தடுத்து மூளைப்புறணி செயற்படுவதற்கு உதவுகின்றது எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |