ஒரு காலத்தில் மன்னர் குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்த 7 இந்திய உணவுகள்
இன்று நம்மில் பலர் நினைத்த நேரமெல்லாம் பிரியாணி சாப்பிடுகிறோம். ஆனால், ஒரு காலத்தில் இந்த பிரியாணி போன்ற 7 உணவுகள், மன்னர்கள், நவாப்கள் மற்றும் ராஜ குடும்பத்தினருக்கென்றே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தனவாம்!
மன்னர் குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்த 7 இந்திய உணவுகள்
பிரியாணி

முகலாய மன்னர்களின் சமையலறைகளில் பிறந்த இந்த பிரியாணி, ஒரு காலத்தில் மன்னர்கள் மட்டுமே சாப்பிடும் ஆடம்பர உணவாக கருதப்பட்டுள்ளது.
மாவா கச்சோரி

ராஜஸ்தான் இனிப்பு வகையான இந்த உணவு, முதலில் அரண்மனைகளில் மட்டுமே கிடைத்த நிலையில், பிறகு உள்ளூர் இனிப்பு கடைகளை அடைய, இன்று அனைவரும் உண்ணும் ஒரு இனிப்பு வகையாகியுள்ளது.
சாட்

சாட் என அழைக்கப்படும் வட இந்திய நொறுக்குத்தீனிகளும் ஒரு காலத்தில் ராஜ குடும்பங்களில் மட்டுமே உண்ணப்பட்டுவந்த நிலையில், இன்று கிட்டத்தட்ட உலகம் முழுவதுமே அவை கிடைக்கும் நிலை காணப்படுகிறது.
கபாப்

நவாப்களின் அரண்மனைகளில் இந்த கபாப் என்னும் உணவு ஒரு ஆடம்பர உணவாக கருதப்பட்டுவந்துள்ளது. குறிப்பாக, வயதான ராஜ குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு வசதியாக, மென்மையாக கபாப்களை உருவாக்கிவந்துள்ளார்கள் ராஜ குடும்ப சமையல்காரர்கள்.
நிஹாரி

முகலாய ராஜ குடும்பங்களிலிருந்து தோன்றிய இந்த நிஹாரி, இறைச்சியை நீண்ட நேரம் சமைத்து செய்யப்படும் ஒரு உணவாகும். அதன் பொருளே அரபு மொழியில் காலை என்பதாகும். அதாவது, இரவு முழுவதும் வெந்த இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவை காலையில் சாப்பிடுவதுதான் இந்த நிஹாரி.
மிர்ச்சி கா சலன்

ஹைதராபாதில் உருவான, மிளகாய்களைக் கொண்டு சமைக்கப்படும் இந்த உணவு, நிஜாம்களின் அரண்மனைகளில், பிரியாணியுடன் பரிமாறப்படும் ஒரு உணவாகும்.
சமோசா

இன்று சாலையோரக்கடைகளில் கூட கிடைக்கும் சமோசா, ஒரு காலத்தில் கொத்துக் கறி, முந்திரி, விலை உயர்ந்த மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டுவந்ததாம்.
இன்று உருளைக்கிழங்கு, பட்டாணி என எளிய காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சமோசாவை யார் வேண்டுமானாலும் உண்ணமுடியும்.
ஆக, இன்று அனைவருக்கும் கிடைக்கும் பல பிரபல உணவுகள், ஒரு காலத்தில் மன்னர் குடும்பங்கள் சாப்பிட்ட உணவுப்பொருட்கள் என்பதை நினைத்துப்பார்த்தால் வியப்பாகத்தான் உள்ளது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |