உடல் ஆரோக்கியமாக இல்லாததை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்: என்னென்ன தெரியுமா?
நீண்ட நாள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
அதற்காக பலரும் உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர்.
அந்தவகையில், உடல் ஆரோக்கியமாக இல்லாததை எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன அறிகுறிகள்?
1. நாக்கில் வெள்ளை படலம்- காலையில் எழுந்ததும் நாக்கில் வெள்ளை படலம் அதிகமாக இருந்தால், உடலில் கழிவுகள் அதிகமாக இருக்கலாம்.
2. எப்போதும் உடல் சோர்வு- 8 மணி நேரம் தூங்கிய பிறகும் சோர்வாக இருந்தால், அது உடல்நலப் பிரச்சனையின் அறிகுறி.
3. சாப்பிட்டதும் தூக்கம்- ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் தூக்கம் வந்தால், அது இன்சுலின் எதிர்ப்பின் ஆரம்ப அறிகுறி.
4. வாய் துர்நாற்றம்- பல் துலக்கிய பிறகும் வாய் துர்நாற்றம் நீடித்தால், குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருக்கலாம்.
5. மலச்சிக்கல்- தினமும் சீராக மலம் கழிக்க முடியாவிட்டால், உடலின் இயல்பான செயல்பாட்டில் கோளாறு இருக்கலாம்.
6. முகப்பரு- அடிக்கடி முகப்பரு வருவது அல்லது சருமம் அதிக எண்ணெய் பசையாக, அதிக வறட்சியாக இருந்தால், உடல்நலத்தில் மாற்றம் இருப்பதற்கான அறிகுறி.
7. சாப்பிட்ட உடனே மீண்டும் பசி- சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் பசி எடுப்பது அல்லது இனிப்பு, ஜங்க் உணவுகள் மீது அதிக ஆசை ஏற்பட்டால், செரிமான மண்டலம் சரியாக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |