இனி சென்னையில் வெள்ள பாதிப்பு இல்லை - பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்கும் வகையிலான திட்டத்தை நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
சென்னை மழை வெள்ளம்
நவம்பர், டிசம்பர் மாத பருவமழையின் போது, கடந்த சில ஆண்டுகளாகவே, சென்னை கடுமையான வெள்ள பாதிப்புகளை சந்தித்து வந்தது.
மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப கட்டுமானங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், குப்பைகள் நீர் நிலைகளில் கலந்து மழைநீர் வடிகாலுக்கு இடையூராக அமைந்தது.
இந்த சிக்கல்களை சரிசெய்து, வெள்ளப் பாதிப்புகளை குறைக்க, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள்
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை குறைக்கும் வகையில், இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் 2025 - 26 தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த பூங்காக்கள், மழைநீர் வடிகாலாக செயல்பட்டு வெள்ள பாதிப்புகளை குறைக்கும் என கூறப்படுகிறது.
இந்த பூங்காவில் எந்த வித சிமெண்ட் கட்டுமானங்களும் இல்லாமல், பூங்கா முழுவதும் மரங்கள் இருக்கும். மேலும், பூங்காவில் மழை நீர் சேகரிப்பு வசதி இருக்கும்.
மேலும், அதிகரித்து வரும் மக்கள் தொகை அடர்த்தியை கருத்தில் கொண்டு, சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |