கணைய புற்றுநோய் அபாயத்தை எச்சரிக்கும் முக்கிய 7 அறிகுறிகள்.., என்னென்ன தெரியுமா?
வயிற்றுக்கு பின்னால் இருக்கும் கணையத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடற்று வளரும்போது கணைய புற்றுநோய் ஏற்படுகிறது.
இது செரிமான நொதிகள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்குகிறது.
பொதுவாக கணைய புற்றுநோய் ஆரம்பத்தில் எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை.

ஆனால் நோய் முதிரும்போது மஞ்சள் காமாலை, கடுமையான வயிற்று அல்லது முதுகு வலி, திடீர் எடை குறைவு மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
அந்தவகையில், கணைய புற்றுநோய் அபாயத்தை எச்சரிக்கும் முக்கிய 7 அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்னென்ன அறிகுறிகள் ?
1. காரணமில்லாத சரும அரிப்பு- சரும வறட்சி அல்லது அலர்ஜி இல்லாமலேயே தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால், அது கல்லீரல் அல்லது கணைய பிரச்சனையின் அறிகுறிகளாகும்.
2. திடீரென சில உணவுகள் ஒத்துக்கொள்ளாதது- முன்பு சாப்பிட்ட உணவுகள் திடீரென பிடிக்காமல் போவது, குமட்டல் அல்லது பசியின்மை ஏற்படுவது போன்றவை கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும்.
3. கண்கள் அல்லது தோல் மஞ்சள் நிறமாக மாறுவது- கணையத்தில் உருவாகும் கட்டி பித்தநாளத்தை அடைத்தால் மஞ்சள் காமாலை ஏற்படலாம். இது கணைய புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
4. முதுகின் நடுப்பகுதியில் நீடித்த வலி- முதுகின் நடுப்பகுதியில் தொடர்ந்து வலி இருந்தால், அது கணைய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
5. எண்ணெய் பசையுள்ள மலம்- கணையம் செரிமான நொதிகளை போதுமான அளவில் உற்பத்தி செய்யாதபோது, கொழுப்பு சரியாக செரிமானமாகாது. இதனால் மலம் மிதக்கும் தன்மையுடனும், எண்ணெய் பசையுடனும் காணப்படும்.
6. காரணமில்லாத உடல் எடை குறைதல்- உடல் எடை திடீரென குறைந்தால், அது கணையத்தில் உள்ள பிரச்சனையின் அறிகுறிகளாகும்.
7. திடீரென சர்க்கரை நோய் வருவது- 50 வயதுக்கு பிறகு புதிதாக சர்க்கரை நோய் கண்டறியப்பட்டால், சிலருக்கு அது கணையத்தின் செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |