7 வாரங்களுக்கு முன் மாயமான அழகிய இளம்பெண்... தற்போது கிடைத்துள்ள செய்தி
பிரித்தானியாவில் 7 வாரங்களுக்கு முன் மாயமானார் ஒரு இளம் பெண் செவிலியர்.
தற்போது அவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் எசெக்சில் 7 வாரங்களுக்கு முன் ஒரு அழகிய இளம்பெண் மாயமான நிலையில், தற்போது அவர் நல்ல நிலையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அவரது குடும்பத்தாருக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை மாதம் 4ஆம் திகதி தனது வீட்டை விட்டு வெளியேறினார் செவிலியரான Owami Davies (24).
இரண்டு நாட்களுக்குப் பின் மகளைக் காணவில்லை என அவரது தாயாகிய Nicol Davies பொலிசில் புகாரளித்ததைத் தொடர்ந்து காணாமல் போனவர் என அறிவித்து பொலிசார் Owamiயைத் தேடிவந்தனர்.
Image: Family handout
Owami வழக்கில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. முதலில் அவர் பணி செய்த மருத்துவமனை அவரைக் காணவில்லை என்ற விடயத்தைக் குறித்து ஒரு மாதம் வரை அவரது சக ஊழியர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லையாம். குறிப்பாக, அவர் ஒரு கருப்பினத்தவர் என்பதால், மருத்துவமனை அவரது விடயத்தில் அக்கறை காட்டவில்லை என Owamiயின் உடன் பணியாற்றுவோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்னொரு விடயம் என்னவென்றால், Owami காணாமல் போனதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்ட அதே நாளில், ஒரு வீட்டின் முன் ஒரு இளம்பெண் படுத்திருப்பதாக தகவல் கிடைத்து பொலிசார் அங்கு செல்ல, அந்தப் பெண் தன் பெயரை Owami என்று கூறியும், பொலிசார் அதுதான் காணாமல் போனதாக தேடப்படும் Owami என்பதைக் கவனிக்காமல் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
Image: Family handout
அன்றே பொலிசார் பொறுப்பாக அந்தப் பெண்ணின் முழு பெயரைக் கேட்டிருந்தால் கூட இந்தப் பிரச்சினை 7 வாரங்களுக்கு நீண்டிருக்காது.
எப்படியும், தற்போது, ஆதாவது நேற்று, காலை 11.30 மணியளவில் Hampshireஇல் Owamiயைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவலளிக்க, Owami கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவர் நல்ல நிலைமையில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், Owami எங்கு சென்றார், இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார், அவர் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறித்த விவரங்களை பொலிசார் நேற்று வெளியிடவில்லை.