ஜேர்மன் ஜனாதிபதிக்கான போட்டியில் ஏழு பெண்கள்
Parties weigh candidates for next president: ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துவக்கியுள்ளன.
ஜேர்மனியின் ஜனாதிபதியான ஃப்ராங்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மெயரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துவக்கியுள்ளன.
ஜனாதிபதிக்கான போட்டியில் ஏழு பெண்கள்
ஜேர்மனியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் பல பெயர்கள் அடிபடும் நிலையில், ஜனாதிபதிக்கான போட்டியில் ஏழு பெண்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இல்ஸ் ஐக்னர்: பவேரியாவின் மாநில நாடாளுமன்றத்தின் தலைவர், Christian Social Union (CSU) கட்சியைச் சேர்ந்தவர்.

ஜூலியா க்லோக்னர்: ஜேர்மன் ஃபெடரல் நாடாளுமன்றத்தின் தலைவர், சேன்சலர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் Christian Democratic Union (CDU) கட்சியைச் சேர்ந்தவர்.

கரின் பிரையன்: ஃபெடரல் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், இவரும் CDU கட்சியைச் சேர்ந்தவர்.
ஆன்க்ரெட் க்ராம்ப் கேரன்பேயர்: முன்னாள் CDU தலைவர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்.

ஐனெஸ் க்லாஸ்: ஹெஸ்ஸே மாகாண CDU நாடாளுமன்றக் குழுத் தலைவர்.
ஜூலி ஸே: எழுத்தாளர், பிராண்டன்பர்க்கில் உள்ள அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி, Social Democratic Party (SPD) கட்சியைச் சேர்ந்தவர்.

இவர்களுடன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மற்றும் CDU கட்சியைச் சேர்ந்தவரான உர்சுலா வான் டெர் லேயன் பெயரும் ஜேர்மன் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.