பிரித்தானியாவில் நடந்த கோர கார் விபத்து: 7 வயது சிறுவன் பலியான சோகம்
பிரித்தானியாவில் நடந்த கார் விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் மோதி விபத்து
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்ட் (Sutton-in-Ashfield) பகுதியில் நடந்த கோரமான கார் விபத்தில் 7 வயது லோகன் பார்க்கர்(Logan Parker) என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.26 மணியளவில் கிங்ஃபிஷர் வே அருகே உள்ள A38 கிங்ஸ் மில் ஈஸ்ட் சாலையில் இந்த கார் விபத்து நடந்துள்ளது.

விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்த போதிலும், சிறுவன் லோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
லோகனுக்கு அவரது தாயார் வெளியிட்ட அஞ்சலி செய்தியில், அழகான, மகிழ்ச்சியான மற்றும் குறும்புக்கார சிறுவன் என்று வர்ணித்துள்ளார். அத்துடன் நீ எப்போதும் அளவில்லாத அன்புடன் நேசிக்கப்படுவாய், உன்னை எப்போது மறக்க முடியாது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சரணடைந்த கார் ஓட்டுநர்
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் விபத்து பகுதியிலேயே இருந்து காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
A38 கிங்ஸ் மில் ஈஸ்ட் சாலை விசாரணைக்காக தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், தற்போது அது மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |