சவாரிகளை ரத்து செய்தும் ஒரு வருடத்தில் ரூ.90 லட்சம் சம்பாதித்த Uber டிரைவர்

United States of America Money Dollars
By Ragavan Nov 07, 2023 10:02 AM GMT
Report

70 வயதான Uber டிரைவர் ஒருவர் சவாரிகளை ரத்து செய்ததன் மூலம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.

தொழில் வாழ்க்கையில் ஒரு சிறு டெக்னிக்கை பயன்படுத்தி ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட ரூ.92 லட்சம் சம்பாதித்த முதியவர் சமூக வலைதளங்களை அதிர வைக்கிறார்.

ரைடுகளை கேன்சல் செய்து ரூ.92 லட்சம் சம்பாதித்த Uber டிரைவரைப் பற்றி தெரிந்தால், 'இந்த டெக்னிக் தெரியாமல் எவ்வளவு நேரத்தை வீணடித்திருக்கிறோம்?' என்று உங்களுக்கு தோன்றலாம்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த பில் என்ற 70 வயது முதியவர் Uber டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

Uber Taxi Driver, 70-year-old Uber driver earns lakhs by cancelling rides, Uber driver from North Carolina, Uber techniques

ரூ.90 லட்சம் சம்பாதித்த பில்

நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று, ரைடு-ஹெய்லிங் பிளாட்பாரத்தில் Uber டிரைவராக ஆனார். சவாரிக்காக அவர் பெற்ற கோரிக்கைகளில் சுமார் 30 சதவீதத்தை ரத்து செய்தும், கடந்த ஆண்டு இலங்கை பண மதிப்பில் ரூ.92 லட்சம் சம்பாதித்தார். அவரது சூப்பர் டெக்னிக் அமெரிக்காவில் விவாதப் பொருளாகிவிட்டது.

அவர் தனது சவாரி நேரத்தை மிகவும் மதிக்கிறார், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சமநிலைப்படுத்த ஒரு இறுக்கமான அட்டவணையை பராமரிக்கிறார். வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்து வந்த ஓய்வு பெற்ற பில், இப்போது 30 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடிவு செய்துள்ளார். தேவை இருந்தால் மட்டுமே வண்டியை எடுக்கிறார். இல்லையெனில் ரத்து செய்துவிடுவார்.

அவர் பெற்ற கோரிக்கைகளில் 30 சதவீதத்தை ரத்து செய்த பிறகும், அவர் ரூ.92 லட்சம் சம்பாதித்தது சமூக வலைதளங்களில் வைரலானது, ஆனால் அமெரிக்காவில் விவாதப் பொருளாகவும் மாறினார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி சரிவு., அவரது சொத்து மதிப்பு எவ்வளவு குறைந்தது?

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி சரிவு., அவரது சொத்து மதிப்பு எவ்வளவு குறைந்தது?

வாரத்திற்கு 30 மணி நேரத்திற்கு மேல் ஓட்டவில்லை

இதைப் பற்றி பேசிய பில், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் பெரும்பாலான கோரிக்கைகளை நிராகரிப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அதிக தேவை நேரத்தில் மட்டுமே அவற்றை எடுத்துக்கொள்கிறார். வாரத்திற்கு 30 மணி நேரத்திற்கு மேல் உபெர் வாகனத்தை ஓட்டவில்லை என்று அவர் கூறினார்.

சமீபகாலமாக நம்ம ஏரியாவில் டிமாண்ட் அதிகம் இருக்கும் காலங்கள் குறைகிறது. இதனுடன் தனது ரைடுகளும் குறைந்து வருகிறது என்றார். தேவைக்கேற்ப காலை 10 மணி முதல் 2.30 மணி வரை கிடைக்கும். தனக்குப் பிடித்தமான சவாரிகள் கிடைத்தால் எடுத்துச் செல்வேன் என்றார்.

ஆனால், உபெர் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தும் ஓட்டுனர்களை ஓரங்கட்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு குறைவான சவாரிகளை ஒதுக்குகிறது. ஆனால், இந்த முதியவர் தனது புதுமையான உத்தியை ரிஸ்க் எடுத்து இவ்வளவு பாரிய தொகையை சம்பாதித்தார்.

Uber Taxi Driver, 70-year-old Uber driver earns lakhs by cancelling rides, Uber driver from North Carolina, Uber techniques

சில டெக்னிக்குகளை பயன்படுத்துவேன்

கடந்த கோவிட் காலத்தில், உடல்நலக் குறைபாடு காரணமாக பல ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டுவதை நிறுத்தியதாகவும், ஆனால் அந்த நேரத்தில் அவர் ஒரு மணி நேரத்திற்கு 50 டொலர்கள் வரை சம்பாதித்ததாகவும் அவர் கூறினார். இப்போது தேவை குறைந்துள்ளது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 20 டொலர்கள் மட்டுமே கிடைக்கிறது என்றார்.

ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக சில டெக்னிக்குகளை பயன்படுத்துவேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதன் ஒரு பகுதியாக, வார இறுதி நாட்களில் தேவை இருப்பதால் அந்த சவாரிகளை விடுவதில்லை என பில் கூறுகிறார். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை அவர் தேவைக்கேற்ப சவாரிகளுக்கு செல்கிறார்.

உடல் முழுதும் ரத்தினங்களால் ஆன கடல்வாழ் உயிரினம்.. இந்த நீர்வாழ் உயிரினம் பற்றி தெரியுமா?

உடல் முழுதும் ரத்தினங்களால் ஆன கடல்வாழ் உயிரினம்.. இந்த நீர்வாழ் உயிரினம் பற்றி தெரியுமா?

ரிஸ்க் எடுத்தால் தான் பணம் சம்பாதிக்கமுடியும்

விமானத்தில் பயணம் செய்பவர்கள் அந்த நேரத்தில் வாடகை வண்டிகளை முன்பதிவு செய்கிறார்கள். எனவே அந்த நேரத்தில் தேவை உள்ளது. 10 முதல் 20 நிமிட பயணத்திற்கு ஒவ்வொரு முறையும் 40 முதல் 50 டொலர்கள் வரை பெறலாம். அதே 35 நிமிட பயணத்திற்கு 30 முதல் 60 டொலர்கள் வரை சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன. அந்த நேரத்தை பயன்படுத்தி குறைந்த நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்கிறார்.

ஆனால், இது போன்ற நுட்பங்கள் ஓரளவு ஆபத்தானவை. ஊபரின் கூற்றுப்படி, ஓட்டுனர் பயணத்தை மறுத்தால் அல்லது ரத்து செய்தால், அவர்கள் தங்கள் கணக்கிற்கான அணுகலை இழக்க நேரிடும். பில்லும் அப்படிப்பட்ட நிலையை எதிர்கொண்டார். ஆனால் அவர் தனது நுட்பத்தை பின்பற்றுகிறார். அவர் சிரித்துக்கொண்டே பணம் ரிஸ்க்கில் இருந்து தான் கிடைக்கிறது என்று கூறுகிறார்.

குவைத்தில் திருமணமாகாத புலம்பெயர்ந்த இளைஞர்களை பாதிக்கும் புதிய சட்டம்!

குவைத்தில் திருமணமாகாத புலம்பெயர்ந்த இளைஞர்களை பாதிக்கும் புதிய சட்டம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Uber Taxi Driver, 70-year-old Uber driver earns lakhs by cancelling rides, Uber driver from North Carolina, Uber techniques

மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US