பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?
பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?
பிரான்சின் National Rally கட்சியின் தலைவரான ஜோர்டன் (Jordan Bardella), பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பது குறித்து துல்லியமான பதில் வேண்டும் என கோரினார்.
அதைத் தொடர்ந்து, நேற்று, பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Laurent Nunez, அந்தக் கேள்விக்கு பதிலளித்தார்.
பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் சுமார் 700,000 பேர் வாழ்வதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், பிரான்சின் பொருளாதாரம் மற்றும் புவி சீதோஷ்ணச் சூழலைப் பொருத்தவரை, புலம்பெயர்தல் என்பது ஒரு சிக்கலான மற்றும் சவாலான நிதர்சனமாக நீடிக்கிறது என்றும் கூறியுள்ளார் Laurent Nunez.
மேலும், நமது எல்லைகளை மேம்பட்ட முறையில் கட்டுப்படுத்துவதற்காக நாம் ஐரோப்பாவுடன் இணைந்து செயலாற்றவேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |