71 லட்சத்திற்கும் அதிகமான WhatsApp கணக்குகளுக்கு தடை : இந்தியா அரசு எடுத்த அதிரடி முடிவு!
இந்தியாவில் 71 லட்சத்திற்கும் அதிகமான WhatsApp கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
WhatsApp தடை
உலகளவில் 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர். இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
இந்நிலையில் இந்தியாவில் 71 லட்சத்திற்கும் அதிகமான WhatsApp கணக்குகளுக்களை தடை செய்துள்ளனர்.
செப்டம்பர் 1 முதல் 30 வரை நாட்டில் குறைந்தபட்சம் 71,11,000 கணக்கு கணக்குகளை செய்தியிடல் தளம் தடை செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் சுமார் 25,71,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டன.
500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்தியா, செப்டம்பரில் குறிப்பிடத்தக்க 10,442 புகார் அறிக்கைகளைக் கொண்டு, இந்த அறிக்கைகளில் 85 சதவீதத்தை WhatsApp தடை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |