இரண்டு கொரோனா தடுப்பூசி போட்ட 7 நாட்களுக்கு பின் என்ன நடக்கிறது தெரியுமா? பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்த உண்மை
கொரோனத் தடுப்பு ஊசிகள், 75 வயதிற்கு மேற்பட்டவர்களில், 87 சதவீதமானவர்களை, கொரோனாத் தொற்றினால் ஏற்படும் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவினாலும், தற்போது அங்கு கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் மக்கள் அனைவரம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததற்கு முக்கிய காரணம் தடுப்பூசி தான், எனவே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனத் தடுப்பு ஊசிகள், 75 வயதிற்கு மேற்பட்டவர்களில், 87 சதவீதமானவர்களை, கொரோனாத் தொற்றினால் ஏற்படும் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரண்டாவது தடுப்பூசி போடப்பட்ட ஏழு நாட்களிற்குப் பின்னர், இவர்களிற்கான கொரோனா நோய்எதிர்ப்பு சக்தி உருவாகிவிடுகிறது.
இதனால், இரண்டு தடுப்பூசியும் போடப்பட்ட 75 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால், 10-ல் 9 பேர் என்ற விகிதத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.