இந்தியாவில் 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியீடு: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
75 ரூபாய் நாணயம்
இந்தியாவில் நாளை பிரம்மாண்டமான நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை மேலும் செழிப்படைய வைக்கும் விதமாக மத்திய அரசு புதிய 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
The new Parliament building will make every Indian proud. This video offers a glimpse of this iconic building. I have a special request- share this video with your own voice-over, which conveys your thoughts. I will re-Tweet some of them. Don’t forget to use #MyParliamentMyPride. pic.twitter.com/yEt4F38e8E
— Narendra Modi (@narendramodi) May 26, 2023
நாணயத்தின் சிறப்பம்சங்கள்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக தூணின் சிங்க தலைநகரம், அதன் கீழே “சத்யமேவ ஜெயதே” என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருக்கும். அதன் இடது பக்கத்தில் தேவநாகரி எழுத்துகளிலும், வலது பக்கத்தில் ஆங்கிலத்திலும் “பாரத்” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டு இருக்கும்.
சிறப்பு நாணயத்தின் மறுபக்கத்தில் நாடாளுமன்றத்தின் வரைபடம் இடம்பெற்று இருப்பதுடன், அதன் மேல் பக்கத்தில் “சன்சாத் சங்குல்” என்று தேவநாகரி எழுத்திலும், கீழ் பக்கத்தில் “Parliament Complex” என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட உள்ளது.
Twitter/BJP Bihar
நாணயத்தின் அளவு
சிறப்பு 75 ரூபாய் நாணயம் 44 மில்லி மீட்டர் விட்டம் கொண்டது என்றும் 35 கிராம் எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது.
இவற்றில் வெள்ளி 50%, செம்பு 40%, நிக்கல் 5% மற்றும் துத்தநாகம் 5% ஆகியவற்றின் மூலம் வடிவமைக்கப்பட்ட வட்டவடிவ நாணயம் என தகவல் வெளியாகியுள்ளது.