தன்னைவிட 45 வயது இளைய பெண்ணை மணந்த நபர்: மறுநாள் காலை கிடைத்த அதிர்ச்சி
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன்னைவிட 45 வயது இளைய பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டார் 75 வயது முதியவர் ஒருவர்.
திருமணம் முடிந்த மறுநாள் காலை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி காத்திருந்தது.
45 வயது இளைய பெண்ணை மணந்த நபர்
உத்தரப்பிரதேசத்திலுள்ள Jaunpur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sangruram (75). மனைவியை இழந்த அவர், தனது முதல் திருமணம் மூலம் பிள்ளைகளும் இல்லாததால் தனிமையில் வாடிவந்துள்ளார்.
ஆகவே, மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் Sangruram. ஆனால், இந்த வயதில் இனி ஒரு திருமணம் வேண்டாம் என அவரது உறவினர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், திங்கட்கிழமை, அதாவது, செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, Manbhavati (35) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் Sangruram.
Manbhavatiயின் முதல் திருமணம் மூலம் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். நீ வீட்டைப் பார்த்துக்கொண்டால் போதும், நான் விவசாயம் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து உன்னையும் உன் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்கிறேன் என்று Sangruram தனக்கு வாக்களித்ததாகத் தெரிவிக்கிறார் Manbhavati.
மறுநாள் காலை கிடைத்த அதிர்ச்சி
ஆனால், திருமணம் முடிந்து மறுநாள் காலை திடீரென Sangruramஇன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
திருமண வீட்டில் அலங்காரங்கள் கூட அகற்றப்படாத நிலையில், அங்கு ஒரு மரணம் ஏற்பட்டுள்ள விடயம், மணப்பெண்ணான Manbhavatiக்கும், இரு குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |