ஆட்டோ டிரைவராக தொடங்கி.. ரூ.800 கோடி மதிப்பிலான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய இந்தியர்
ஆட்டோ டிரைவாக வாழ்க்கையை தொடங்கி இன்று ரூ.800 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த சத்ய சங்கரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
சத்ய சங்கர்
இந்திய மாநிலம், கர்நாடகாவில் உள்ள புத்தூர் அருகே உள்ள பெல்லாரே கிராமத்தில் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சத்ய சங்கர். ரிலையன்ஸ் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானியின் வெற்றி தான் இவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் முதலில் ஆட்டோ ரிக்ஷா வாங்கி தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்பு, ஒரே ஆண்டில் ஆட்டோ வாங்கிய கடனை அடைத்தார். தொடர்ந்து இவருக்கு அம்பாசிடர் கார் வாங்க வேண்டும் என்று ஆசை வந்தது. பின், அதனையும் முறியடித்து அம்பாசிடர் காரும் வாங்கினார்.
டாக்சி டிரைவர் ஆனாலும், 1987ல் ஆட்டோ கேரேஜ் துறைக்கு மாறி, டயர் டீலர்ஷிப்பை தொடங்கினார். அதன் பிறகு, 2022 -ம் ஆண்டு வட இந்தியாவுக்கு வேலை விடயமாக சென்ற போது தான் அங்குள்ள உள்ளூர் பானமான ஜீராவை குடித்தார். அந்த நேரத்தில் தான், நம் மாநிலத்திலும் இந்த பானத்தை விற்கலாம் என்று யோசனை இவருக்கு வந்துள்ளது.
ரூ.800 கோடி மதிப்பிலான நிறுவனம்
பிந்து ஜீரோ மசாலா சோடாவை சந்தையில் சத்ய சங்கர் அறிமுகம் செய்தார். அதன் பிறகு ரூ.35,00,000 முதலீட்டில் எஸ்.ஜி. கார்ப்பரேட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து 2006 -ம் ஆண்டு ரூ.6 கோடி வருவாயை ஈட்டியது.
இவருடைய நிறுவனம் ரூ.100 கோடி வருவாயை ஈட்டினாலும், 2015 -ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு பிந்து ஜீரா சோடாவை ஏற்றுமதி செய்து புது உத்தியை கையாண்டார். இன்று இந்த பிந்து ஜீரா சோடா நிறுவனம் ரூ.800 கோடி மதிப்பில் உயர்ந்து நிற்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |