வாழைப்பழங்களுக்குள் பதுக்கி கடத்தப்படவிருந்த 76 மி. பவுண்ட் மதிப்பிலான பொருள்! பிரித்தானிய எல்லைப் படையினர் அதிரடி நடவடிக்கை
பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 1 டன் எடையிலான போதைப்பொருளை எல்லை படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள Antwerp துறைமுகத்துக்கு செமன்றுகொண்டிருந்த வணிக கப்பலில் நேற்று பிரித்தானிய எல்லை படையினர் சொத்தையை ஈடுபட்டனர்.
அதிலிருந்த ஒரு கன்டைனரில் வாழைப்பழ பெட்டிகளுக்குள் 946 கிலோ எடையுள்ள கொக்கைன் பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மார்க்கெட் விலையில் சுமார் 76 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான இந்த class A போதைப்பபொருளை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கடந்த 1 மதத்திற்கு முன்னதாக, வாழைப்பழத்திற்குள் திணிக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் Class A போதைப்பொருட்களை கொலம்பியாவிலிருந்து நெதெர்லாந்துக்கு கடத்தப்படவிருந்த நிலையில் பிரித்தானிய எல்லை படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பிரித்தானியாவிற்குள் அல்லது பிரித்தானியா வழியாக போதைப்பொருளை கடத்தும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகளை கடுமையாக எச்சரிப்பதாக உள்துறை செயலாளர் பிரிதி படேல் கூறியுள்ளார்.
இதன் ஆங்கில இணைப்புக்கு இங்கே சொடுக்குக...