எதிரே சைக்கிளில் வந்த வயதான பெண்மணியைப் பார்த்து ஆக்ரோஷமாக சத்தமிட்ட பெண்: அடுத்து நடந்த பயங்கரம்
பிரித்தானியாவில் தான் நடந்துவரும் பாதையில், எதிரே சைக்கிளில் வந்த வயதான ஒரு பெண்மணியைப் பார்த்து மோசமாக சைகை காட்டி ஆக்ரோஷமாக சத்தமிட்ட ஒரு பெண், சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நடைபாதையில் தன் எதிரே சைக்கிளில் வந்துகொண்டிருந்த 77 வயதான Celia Ward என்னும் பெண்ணைக் கண்டு, நடைபாதையில் வருகிறாயே, வெளியே போ என கெட்ட வார்த்தையில் திட்டி, மோசமாக சைகை காட்டியிருக்கிறார் Auriol Grey (49) என்னும் பெண்.
பயந்துபோன Celia தன் சைக்கிளை சாலையில் இறக்க முயலும்போது, தடுமாறிய அவரது சைக்கிள் சாலையில் விழ, அதை அவர் குனிந்து தூக்க முயலும்போது, வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பலமாக மோதியுள்ளது. உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார் Auriol.
Credit: PA
உயிர்ப்பலி வாங்கிய கோபம்
மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தும் Celiaவைக் காப்பாற்ற முடியவில்லை. சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார் அவர்.
தற்போது இந்த வழக்கில் Auriolக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Credit: SWNS
இரண்டு பெண்களும் பயணித்த பாதை, நடப்பதற்கு மட்டுமே உரியது என்றோ, சைக்கிள் ஓட்டுவதற்குரியது என்றோ வகைப்படுத்தப்படவில்லை. அத்துடன், Auriol சாதாரணமாக, கவனித்து வாருங்கள் என்று Celiaவிடம் கூறியிருந்தால் ஒரு உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
ஆக, சாலையில் பயணிக்கும் பயணிகள் ஒருவர் மற்றவர் மீது அக்கறை காட்டுவது, அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பாதுகாப்பு என்பதற்கு இந்த துயர சம்பவம் ஒரு பாடம்.
Credit: PA