டிவி ரிமோட் உடைந்ததால் 7ஆம் வகுப்பு மாணவி தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்
தமிழக மாவட்டம் சேலத்தில் டிவி ரிமோட்டை உடைத்ததால், 7ஆம் வகுப்பு மாணவி பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை மாணவி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்த்தவர் சக்திவேல். கூலித்தொழிலாளியான இவருக்கு ரூபிணி என்ற மனைவியும், கவியரசி மற்றும் பிரபா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
சக்திவேலின் மகள்களில் கவியரசி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரிமோட்டை யார் வைத்திருப்பது என்பதில் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததில் ரிமோட் உடைந்துள்ளது.
பெற்றோருக்கு பயந்து தற்கொலை
இதனையடுத்து கவியரசி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரிமோட் உடைந்ததால் பெற்றோருக்கு பயந்து சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் சிறுமி கவியரசியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Getty Images/iStockphoto| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |