போலிச்சான்றிதழ்களுடன் பிரித்தானியா செல்ல முயன்ற 8 இந்தியர்கள்: 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்த பரிதாபம்
இந்தியாவிலிருந்து போலிச்சான்றிதழ்கள் மூலம் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியா புறப்பட்ட எட்டு இந்தியர்கள்
பிரித்தானியாவில் குடியமர விரும்பிய எட்டு இந்தியர்கள், பிரித்தானியா செல்வதற்காக, இம்மாதம் 22ஆம் திகதி, அதிகாலை 5.45 மணியளவில். மும்பை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்கள்.
வெவ்வேறு கவுண்டர்களில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை அவர்கள் சோதனைக்காக கொடுக்கும்போது, அவர்கள் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணி செய்வதற்கான ஆஃபர் கடிதங்களைக் கொடுத்துள்ளார்கள்.
ஆனால், அந்த நிறுவனத்தின் பெயர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இருந்துள்ளது. அதாவது நிறுவனத்தின் பெயரில் spelling வெவ்வேறு விதமாக இருக்க, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விசாரணையில் தெரியவந்த உண்மை
அதிகாரிகள் அவர்கள் எட்டு பேரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க, விசாரணையில், அவர்கள் பிரித்தானியாவிலிருந்து இயங்கும் Abram Qureshi என்னும் ஏஜண்டை தொடர்புகொண்டதும், ஆளுக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்து, போலிச்சான்றிதழ்கள் பெற்றதும் தெரியவந்தது.
அவர்கள் எட்டு பேரையும் கைது செய்த பொலிசார், அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள தில்வர் சிங், ஷுபம் சிங், மன்தீப் சிங், கைஷ்தீப் சிங், சுஷீல் பால், ஜஸ்விந்தர் பால், குஷால்பிரீத் சிங் மற்றும் குல்ஜீத் சிங் என்னும் அந்த எட்டு பேரும், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |