பயங்கர விபத்து; சுற்றுலா சென்ற 8 தமிழ்நாடு மாணவர்கள் உயிரிழப்பு
8 dindugal college students dies in thirssur car accident: திருச்சூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருச்சூர் விபத்தில் 8 மாணவர்கள் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் 8 மாணவர்கள் கார் மூலமாக கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

நேற்று இரவு 11;42 மணிக்கு கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில் மாணவர்கள் சென்று கொண்டிருந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் கார் நொறுங்கியுள்ளது. மேலும், பயங்கர சத்தத்துடன் கார் மோதியதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

கார் நொறுங்கியதில் காரின் பாகங்களை வெட்டியெடுத்தே மாணவர்களின் உடல்களை மீட்க முடிந்துள்ளது. 8 மாணவர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 5 மாணவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு மாணவரின் உடல் மோதிய வேகத்தில் லாரியின் மீது தூக்கி வீசப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |