நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
தற்போது, காலங்கள் மாற்றத்தின் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்த்தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதுதான்.
அந்தவகையில், இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
1. பழங்கள்- ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு மிக சிறந்தவை. இது வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
2. பூண்டு- பூண்டில் அல்லிசின் போன்ற கந்தகம் கொண்ட சேர்மங்கள் உள்ளன. இவை இயற்கையாகவே நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகின்றன.
3. தயிர்- தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்களான புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு மிக முக்கியமானது.
4. இஞ்சி- இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு சேர்மம் தொண்டை வலி மற்றும் குமட்டலை எதிர்த்து போராட உதவுகிறது. இதன் அன்டிஆக்ஸிடன்ட் பண்புகளும் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
5. கீரைகள்- கீரையில் உள்ள வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகின்றன.
6. கிரீன் டீ- கிரீன் டீயில் உள்ள ஃப்ளவனாய்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.
7. பாதாம்- பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |