ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 பேர்; லண்டன் அருகே பரபரப்பு சம்பவம்
இங்கிலாந்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டர் உச்சியில் சிக்கிய 8 ரைடர்கள் மீட்கப்பட்டனர்.
எட்டு வயது சிறுமி உட்பட 8 ரைடர்கள் மீட்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள அட்வென்ச்சர் தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
SWNS
72 அடி உயரத்தில் பயணிகள் சிக்கினர். மீட்புப் பணியாளர்கள் பிளாட்பார்ம் லிஃப்டை பயன்படுத்தி அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அவர்கள் குறைந்தது அரை மணி நேரம், 45 நிமிடங்கள் அவர்கள் உச்சியில் சிக்கித் தவித்ததாக நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறியுள்ளார். நிலைமையை பூங்கா நன்றாக கையாண்டதாகவும், எல்லாம் மிகவும் அமைதியாக இருந்தது என்று அந்த நபர் கூறினார்.
SWNS
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு பெண், மாட்டிக்கொண்டவர்களில் ஒருவராக தனது சகோதரர் இருந்ததால் மிகவும் பயமாக இருந்ததாக கூறினார். ஆனால், தனது சகோதரர் பயப்படாமல் இருந்ததாக அவர் கூறினார்.
SWNS
SWNS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Eight riders rescued from a rollercoaster, rollercoaster ride, amusement park in England, Adventure Island in Southend, Essex amusement park