லண்டனில் பயங்கர ஆயுதத்துடன் வீட்டிற்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பலின் துணிகர செயல்: புகைப்படங்களை வெளியிட்ட பொலிசார்
லண்டனின் முகமூடி அணிந்த 8 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதத்துடன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Walthamstow-ல் உள்ள Brookscroft சாலையில் உள்ள குடும்பத்தினர் இருக்கும் வீடு ஒன்றில், கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் திகதி முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் தாங்கள் வைத்திருந்த கத்தி போன்ற பயங்கர ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால், வீட்டின் உள்ளே இருந்த நான்கு பேர் அவர்களுடன் போரடியதால், 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அந்த கும்பல் பொலிசார் வருவதற்குள் பொருட்களை திருடாமல் அங்கிருந்து ஓடியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசாருடன் விரைந்த தடயவியல் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அதன் பின் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அதே நாள் இரவு Essex-ல் உள்ள Clacton-on-Sea-ல் உள்ள இரவு விடுதியில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று இது இரு திகிலூட்டும் அனுபவமாக குடும்பத்தினருக்கு இருந்துள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலரின் புகைப்படங்களை வெளியிடுவதாகவும், அவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.