பழிக்குப் பழி... முன்பு தனக்கு தொந்தரவு கொடுத்த அனைவரையும் தண்டிக்க ட்ரம்ப் திட்டம்
தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்த அனைவரையும் தண்டிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பழிக்குப் பழி...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் தொந்தரவு கொடுத்த அனைவரையும் பழிக்குப் பழிவாங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறாராம்.
அதற்காக, தன்னையும், 2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களையும் விசாரித்த, சட்ட நடவடிக்கைகள் எடுத்த நீதித்துறை அதிகாரிகளை வேரறுக்க ஒரு குழுவை அமைத்துள்ளாராம்.
ட்ரம்ப் தனது அட்டர்னி ஜெனரலாக Pam Bondi என்பவரை உறுதிப்படுத்தியவுடன், அவர் மூலம் தனது பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Getty Images
ட்ரம்ப் உருவாக்கியுள்ள குழு, ட்ரம்ப் மீது சட்ட நடவடிக்கைகள் எடுத்த நீதித்துறை அதிகாரிகளையும், ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை விசாரித்தவர்களையும், சட்ட நடவடிக்கைகள் எடுத்தவர்களையும், FBI உட்பட அனைத்து அதிகாரிகளையும் கூண்டோடு நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இதற்கிடையில், ஜனவரி 6 ஆம் தேதி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களை மன்னித்த அவரது நடவடிக்கை தனது ஆதரவாளர்களுக்கு ஒரு நன்மை மட்டுமல்ல என தற்போது ஒரு கருத்து உருவாகியுள்ளது.
அதாவது, தனது அரசை எதிர்க்கத் தயாராக இருக்கும் யாரை வேண்டுமானாலும், அவர் விரும்பும் போதெல்லாம் அவரால் பதவிநீக்கம் செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற்காக ட்ரம்ப் எடுத்த மிரட்டல் நடவடிக்கையின் முதல் படியாகவும் அது இருக்கக்கூடும் என சிலர் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |