அவுஸ்திரேலியாவில் 8 வயது சிறுவனின் மரணம்: ஓர் ஆண்டில் 357 இறப்புகள்..அதிர்ச்சி அறிக்கை
அவுஸ்திரேலியாவில் 8 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தது கவலைகளை தூண்டியுள்ளது.
8 வயது சிறுவன்
விக்டோரியாவின் ஷெப்பர்டனுக்கு அருகில் உள்ள கியாலாவில் நீச்சல் குளத்தில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். 
ஆனால், அவனது நிலைமை கவலைதரும் வகையில் இருந்ததையடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
சிறுவனை காப்பாற்ற துணை மருத்துவர்கள் முயற்சித்த போதிலும் பலனளிக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக குறித்த 8 வயது சிறுவன் உயிரிழந்தான். அதன் பின்னர் பொலிஸார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
357 பேர்
மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் தண்ணீரில் இருக்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான 'சோகமான மற்றும் சரியான நேரத்தில் நினையூட்டல்' என்று தெரிவித்தனர்.
விக்டோரியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கியாலாவில் நடந்த இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயங்கள் பிரார்திக்கின்றன" என்றார்.
அவுஸ்திரேலியாவின் the National Drowning அறிக்கையின்படி, 2024-25 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 357 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |