பிரித்தானியாவில் பால்கனியில் இருந்து விழுந்த 8 வயது சிறுமி: பெண் ஒருவர் கைது
பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத்தில் 8 வயது பெண் குழந்தை பால்கனியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
8வயது பெண் குழந்தை உயிரிழப்பு
பிரித்தானியாவின் போர்ட்ஸ்மவுத் பகுதியில் உள்ள கட்டிடத்தின் பால்கனியில் இருந்து 8 வயது பெண் குழந்தை கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இது தொடர்பாக வியாழக்கிழமை மாலை 6:05 மணிக்கு விங்ஃபீல்ட் சாலைக்கு பொலிஸார் மற்றும் மருத்துவ குழுவினர் அழைக்கப்பட்டனர்.
Credit: Solent
சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவ குழுவினர் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கினர், இருப்பினும் 8 வயது சிறுமி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.
பெண் ஒருவர் கைது
இந்நிலையில் குழந்தை புறக்கணிக்கப்பட்ட சந்தேகத்தின் பேரில் 43 வயது பெண் ஒருவர் ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், குழந்தையின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், குழந்தை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Stu Vaizey
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விவரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |