பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீது 80 புகலிடக்கோரிக்கையாளர்கள் புகார்
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய ‘one in, one out’ திட்டத்தின் கீழ் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எண்பது புகலிடக் கோரிக்கையாளர்கள், பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீது புகாரளித்துள்ளார்கள்.
80 புகலிடக்கோரிக்கையாளர்கள் புகார்
சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்கு வந்ததிலிருந்து, பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால், பயம், அவமானம் மற்றும் உளவியல் துயரங்களை அனுபவித்ததாகக் கூறியுள்ள அவர்கள், தாங்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்குமாறு ஐ.நா. அமைப்புகளைக் கோரியுள்ளார்கள்.

Harmondsworth புலம்பெயர்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள தாங்கள், பிரித்தானியாவுக்கு வந்ததிலிருந்து உள்துறை அலுவலகத்தால் அநீதியான முறையில் நடத்தப்பட்டதாக அவர்கள் முன்வைத்துள்ள ஆவணம் ஒன்று கூறுகிறது.
சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட பல்வேறு போர்ச்சூழல் நிலவும் இடங்களிலிருந்து வந்துள்ள அந்த புகலிடக் கோரிக்கையாளர்கள், உள்துறை அலுவலகம் தங்களை தன்னிச்சையான தடுப்புக்காவல், சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் மறுப்பு, போதுமான மருத்துவ பராமரிப்பு இல்லாதது, மோசமாக நடத்துதல் மற்றும் கடுமையான உளவியல் ரீதியான பாதிப்புக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.

ஆனால், தாங்கள், பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறும் ஆசையுடனேயே பிரித்தானியாவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, one in, one out திட்டத்தின் கீழ் திட்டத்தின் கீழ் நாடுகடத்தப்படுவதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் எந்த நிலைமையில் அங்கு தங்கவைக்கப்படுகிறார்கள் என்பதை அவசரமாக விசாரிக்குமாறு அவர்கள் ஐ.நா மற்றும் மனித உரிமைகள் குழுக்களை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |