59 வயது மகனுக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய 80 வயது தாய்
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுநீரக தானம்
இந்திய தலைநகரான டெல்லியில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட 59 வயது மகனுக்கு 80 வயதான தாய் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக பிரச்சனை இருப்பது தெரியவந்தது. பின்னர், இவருடைய தாய் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுப்பதாக கூறினார்.
இதையடுத்து, பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு தாயின் சிறுநீரகம் மகனுக்கு பொருத்தமானது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அதன்படி இருவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது. தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |