பிரித்தானியாவில் நடைபாதை பயணி மீது பாய்ந்த கார்: 80 வயது நபர் கைது
பிரித்தானியாவின் "பெட்ஃபோர்ட்ஷயரில்(Bedfordshire) கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து 80 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சற்று முன்பு, டன்ஸ்டேபிளில்(Dunstable) உள்ள மேற்கு தெருவில் நீல நிற சாப் கார்(blue Saab) மற்றும் ஒரு நடப்பவர் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
இந்த மோதலில், 40 வயதுடைய அந்த நபர் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இறப்பை ஏற்படுத்திய ஆபத்தான ஓட்டம் குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைக்காக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெட்ஃபோர்ட்ஷயர், கேம்பிரிட்ஜ்ஷயர் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் சாலை போக்குவரத்து பிரிவின் சார்ஜென்ட் அலெக்ஸ் வார்ட் கூறுகையில், "இது மிகவும் துயரமான சம்பவம், இறந்த நபரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எங்கள் அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட குதியில் இருந்தவர்கள் அல்லது மோதலை கண்டவர்கள் அல்லது டாஷ் கேம் காட்சிகளை கொண்டவர்கள் எங்கள் விசாரணைக்கு உதவ அவசரமாக எங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |