பிரித்தானியாவில் 800 பேரல் கின்னஸ் பீர் கொள்ளை: திருடப்பட்டது எப்படி?
பிரித்தானியாவில் சினிமா பாணியில் சுமார் 800 பேரல் பீர் திருடப்பட்டுள்ளது.
800 பேரல் பீர் திருட்டு
பிரித்தானியாவின் ரன்கோர்ன்(Runcorn) நகரில் அமைந்துள்ள தொழில்துறை வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட 800 பேரல் கின்னஸ் பீர்(Guinness Beer) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த திருடப்பட்ட பீர் ஆனது சுமார் 70,000 பைண்ட்(pints) அளவுக்கு சமமானது ஆகும்.
அத்துடன் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 115,000 பவுண்டுகள்(இந்திய ரூபாய் மதிப்பில் 1.56 கோடியாகும்) என்று செஷயர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பீர் பேரல்களும் அப்பகுதியில் உள்ள மதுபான விடுதிகளுக்கு விநியோகிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?
மாலை நேரத்து இருளை பயன்படுத்தி கொண்ட திருடர்கள் இரண்டு கனரக சரக்கு டிரக்குகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு சுமார் 7.45 மணிக்கு இந்த வாகனம் மெர்சி கேட்வே பாலம் வழியாக முதல் லொறியானது வெளியேறியது கண்டறியப்பட்டுள்ளது.
அதிலிருந்து 2 மணி நேரம் கழித்து(இரவு 9.30) இரண்டாவது லொறியானது ரெய்ன்ஹில் மற்றும் வாட்கின்சன் வே திசையை நோக்கி சென்றுள்ளது.
முதல் லொறியை ஓட்டி வந்தவர் சிறிய தாடி, பீனி தொப்பி அணிந்த வெள்ளையர் என்றும், இரண்டாவது லொறியை ஓட்டி வந்தவர் கேப் அணிந்து இருந்ததாக மட்டும் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |