பிரான்சில் தெருவில் நடந்த சென்ற நபருக்கு யானை வடிவில் கிடைத்த பணப் புதையல்! பாராட்டி தள்ளும் இணையவாசிகள்
பிரான்சில் தெருவில் நடந்த சென்ற நபர் ஒருவருக்கு கோடிக்கணக்கான பணம் கிடைத்த போதும், அவர் செய்த செயல் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
பிரான்சின் Bordeaux-ஐ சேர்ந்த நபர் கடந்த 24-ஆம் திகதி இரவு Mérignac நகரில் இருக்கும் Dr. Fernand-Grosse's avenue வீதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர், செல்லும் போது அந்த வீதியில், ஒரு யானை வடிவ பார்க்க அழகாக இருந்த பொம்பைப் போன்று பார்த்துள்ளார்.
அதன் பின் அருகே சென்று எடுத்து பார்த்த போது, அந்த யானை வடிவ பொம்பையில், ஒரு வட்ட வடி ஓட்டை மேல் மூடி போடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த நபர் அதை உள்ளே அழுத்தி பார்த்த போது, அதன் உள்ளே சுமார் 85,000 யூரோ(இலங்கை மதிப்பில் 2,01,84,749) பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின் இதை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், இதை அதிர்ஷ்டமாக நினைத்து எடுத்து செல்லாமல், அதை உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு அன்று நள்ளிரவே கொண்டு ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் அது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இது நிச்சயமாக கடத்தல் தொழில் அல்லது போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலால் கைமாற்றப்படும் பணமாகத் தான் இருக்க வேண்டும் .என்று சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே அதன் உண்மை என்ன என்பது தெரியவரும்.
தற்போது இருக்கும் காலத்தில், கீழே ஒரு பத்து ரூபாய் கூட கிடந்தால், எடுத்து செல்லும் நபர்களுக்கு மத்தியில், அந்த நபருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்த போதும், சரியாக கொண்டு வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் இணையத்தில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது