இலங்கையில் சுகாதாரத் துறையை விட்டு விலகிய 850 பொது மருத்துவர்கள்
இலங்கையில் கடந்த ஒரு வருடத்திற்குள் சுமார் 850 பொது வைத்தியர்கள் சுகாதாரத் துறையை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இது தெரியவந்துள்ளது.
இதன்படி கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வருடம் மே மாதம் 31-ஆம் திகதி வரை குறித்த வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பயிற்சிக்காக வெளியேறியவர்கள்
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 274 வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த 785 வைத்தியர்கள் எதிர்வரும் மாதங்களில் பயிற்சிக்காக நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்புவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sri Lanka Doctors, Doctors, Sri Lanka, General Practitioners left the health sector in Sri Lanka, General Practitioners